தமிழகம்

வெறும் 10 பைசாவுக்கு சுட சுட சுவையான பிரியாணி! அலைமோதும் கூட்டம்! எங்கு தெரியுமா?

Summary:

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 10 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 10 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி உலக பிரியாணி தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள பிரியாணி கடை ஒன்று 10 பைசாவுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு 10 பைசாவுக்கு பிரியாணி வழங்குவதாக அறிவித்தது.

இதனை அடுத்து சலுகை விலையில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் காலை முதலே கடை முன்பு கூட்டமாக கூடினார்கள். ஆனால் 10 பைசாவுடன் வரும் முதல் 100 பேருக்கு மட்டுமே 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்ததால் வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

கொரோனா பரவல், சமூக இடைவெளி இதையெல்லாம் மறந்துவிட்டு மக்கள் 10 பைசா பிரியாணிக்காக வரிசையில் காத்திருந்த சம்பவம் மக்களுக்கு பிரியாணி மீதுள்ள மோகத்தை தெள்ள தெளிவாக காட்டுகிறது.


Advertisement