விமானத்தின் கழிவறையில் கிடந்த மர்ம பார்சல்!! பிரித்துப்பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! 1 கிராம் 2 கிராம் இல்ல.. 1 கிலோ 360 கிராம் தங்கம்..

விமானத்தின் கழிவறையில் கிடந்த மர்ம பார்சல்!! பிரித்துப்பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! 1 கிராம் 2 கிராம் இல்ல.. 1 கிலோ 360 கிராம் தங்கம்..1 kg gold found in flight toilet at chennai airport

விமானத்தின் கழிவறையில் கிடந்த 1 கிலோவுக்கு அதிகமான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்திவரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமீபத்தில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் துபாயில் இருந்து வந்த அந்த விமானத்திலும் ஏறி, அதிகாரிகள் விமானத்தின் உள்ளே சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறைக்குள் இருந்த நீர் தொட்டியில் இரண்டு மர்ம பார்சல்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவற்றை சோதனை செய்தபோது, இரண்டு பார்சலில் சேர்த்து சுமார் ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பேசியுள்ள அதிகாரிகள், விமானத்தில் பயணம் செய்த யாரோ சிலர் இந்த தங்கத்தை கடத்தி வந்துருக்கலாம் எனவும், சோதனைக்கு பயந்து தங்கத்தை இங்கையே விட்டுச்சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.