கோவில்களில் திருமணம் செய்வதற்கு பின், இப்படி ஒரு சங்கதியா.? வியக்க வைக்கும் உண்மை.!

சமீப காலமாக திருமணங்கள் ஆடம்பரத்தையும், கௌரவத்தையும் மையப்படுத்தி தான் நடைபெறுகின்றது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் தங்கள் இல்லங்களில் தான் திருமணங்களை நடத்துவார்கள். கிராமப்புறத்தில் தெருவில் பந்தல் போட்டு திருமணத்தை ஆரவாரமாக சொந்தங்கள் புடை சூழ நடத்துவார்கள்.
இடவசதி இல்லாத நபர்கள் கோவில்களில் வைத்து திருமணங்களை நடத்துவார்கள். இவ்வாறு, கோவிலில் திருமணம் செய்து கொள்வதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். கோவிலில் வைத்து, நமது வாழ்க்கைத் துணையை ஏற்றுக் கொள்வது தான் மிகவும் சிறந்தது. எனவேதான் அக்கால மன்னர்கள் திருமணங்களை செய்வதற்கு வசதியாக பெரிய பெரிய மண்டபங்களை வைத்து கோவில்களை கட்டினார்கள்.
இறைவனை சாட்சியாக கொண்டு வாழ்க்கைத் துணையை ஏற்று கொண்டவர்கள், அவரது ஆசீர்வாதத்துடன் தங்களது வாழ்க்கையை துவங்குகின்றனர். இதன் மூலம் நம் வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் கோவில்களில் தெய்வீக நடவடிக்கைகள் மந்திரங்கள் ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கொள்வதால் அங்கு நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கும்.
எனவே, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அந்த பலன்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த நேர்மறை எண்ணங்கள் நமது மனதில் பதட்டங்களை குறைத்து நம்பிக்கையை தரும். சில ஜாதங்களுக்கு திருமணம் என்பதே பெரிய சாதனை செய்யும் விஷயம்தான். துணை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு ஒரு கட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள்.
அவர்கள் ஜாதகங்களில் தோஷங்கள் மற்றும் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கக்கூடிய ஜாதகக்காரர்களாக இருக்கலாம். இது போன்ற நிலைமையில் இருப்பவர்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் செய்வதால் தோஷங்கள் நிவர்த்தி அடைந்து திருமண வாழ்வை பாதிக்காமல் இருக்கும்.
கோவிலில் திருமணம் ஆன உடனேயே அந்த தம்பதிகள் அங்கிருக்கும் மூலவரிடம் ஆசிர்வாதம் பெரும் பாக்கியத்தை பெறுகிறார்கள். தனியார் மண்டபங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, அதிக பணம் செலவழித்து திருமண மண்டபங்களில் திருமணம் செய்து கொள்வதை விட கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்வது தான் சிறந்தது.
அப்படி விருப்பம் இல்லை என்றாலும் கூட மாங்கல்யம் அணியும்போது மட்டுமாவது அந்த நிகழ்ச்சியை கோவிலில் வைத்துக்கொண்டு மற்ற வரவேற்பு உள்ளிட்டவற்றிற்கு மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், தம்பதிகளுக்கு கடவுளின் ஆசி கிடைக்கும்.