விநாயகர் சதுர்த்தி கொண்டாட உகந்த நேரம்... இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது.? முழு விவரம்.! 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட உகந்த நேரம்... இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது.? முழு விவரம்.! 


vinayagar chathurthi celebration good time in 2023

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எந்த தினம் என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அரசு 17 ஆம் தேதியே விடுமுறையை அறிவித்து இருக்கும் நிலையில், பின்னர், 18ம் தேதிக்கு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றிவிட்டது. 

வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை 19ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் விநாயகர் சதுர்த்தி எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 

vinayagar chathurthi

விநாயகர் பிறந்த நட்சத்திரம் அஸ்தம். இந்த ஹஸ்தம் நட்சத்திரம் 17ஆம் தேதி வருவதாலேயே அன்றைய தினத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பலரும் முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால், திதியை பொருத்தவரை சதுர்த்தி திதி 18 ஆம் தேதி காலை 11:38 மேல் தான் வருகிறது. 

விநாயகர் சதுர்த்தி என்றால் அது திதியை குறிப்பதுதான். எனவே, 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தான் சிறப்பாக இருக்கும். ஆவணி அமாவாசைக்கு பின் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தான் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கப்படுகிறது. 

vinayagar chathurthi

எனவே வரும் திங்கள்கிழமை செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தான் சிறப்பு. அதிலும் காலை 11:38 வரை திரிதியை திதி இருப்பதால் அதற்குப் பின் பூஜைகளை செய்வது நல்லது. 

பூஜை செய்ய உகந்த நேரம் : 

18 ஆம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 1:15க்குள் 

மாலை 5 முதல் 6 மணிக்குள் 

இரவு 7 முதல் 8 மணிக்குள் பூஜையை மேற்கொள்ளலாம்.