நாளை பிரதோஷத்துடன் கூடிய புரட்டாசி வெள்ளி.! தவற விடாதீர்கள்.!



september 19 pradhosham and friday for mahalakshmi vazhipadu

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையானது மிக புனிதமானவை. இந்த வெள்ளிக்கிழமை நாட்களில் அம்மன் மற்றும் லட்சுமி தேவிக்கு வழிபாடு செய்வது மிகச் சிறந்தது. மகாலட்சுமிக்கு பாயாசம் நைவேத்தியம் செய்து புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் வழிபடும் போது வீட்டின் வறுமை வெளியேறி செல்வ செழிப்பு ஏற்படும். 

புரட்டாசி மாதத்தின் அனைத்து வெள்ளிகளிலும் வழிபடுவது நல்லது என்றாலும் கடைசி வெள்ளியில் தவறாமல் வழிபடுவது மிக நன்மை கொடுக்கும். அம்மன் கோவில்கள் பலவற்றிலும் புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பான பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

september 19

அந்த பூஜைகளில் கலந்து கொள்வது குடும்பத்திற்கு மிக நல்லது. அதுபோல வீட்டின் பூஜை அறையில் மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீடு பூஜை அறை அனைத்தையும் சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து மனதை ஒருங்கமைத்து மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்வது வீட்டில் மன அமைதியையும் செல்வ செழிப்பையும் ஏற்படுத்தும். 

இதையும் படிங்க: நாளை.. வெள்ளிக்கிழமை.. பணமழை கொட்ட வேண்டுமா? இதை செய்தால் போதும்.!

 மேலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும். செப்டம்பர் 19 ஆம் தேதியான நாளை அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நாள் என்பதால், இந்நாளில் விரதம் இருந்து மகாலட்சுமிக்கு பாயாசம் நைவேத்தியம் செய்து பூஜை மேற்கொள்வது கடன் பிரச்சினைகளை தீர்த்து, செல்வ வளத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: நாளை.. பங்குனி செவ்வாய்.. இந்த நேரத்தில் விளக்கேற்றினால்.. நற்செய்திகள் தேடிவரும்.!