சபரிமலையில் இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.!

சபரிமலையில் இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.!


sabarimalai temple permission

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்துக்கு  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

sabarimalai

மண்டல பூஜை எதிரொலியாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் இன்று முதல் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை என்றும்,  தரிசனத்திற்கு வருவோர் முகக்கவசம், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டுவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.