கடன் தீர செவ்வாய்க்கிழமையில், இந்த விஷயத்தை மட்டும் செய்யுங்கள்.! படிப்படியாக கடன் குறையும்.!

கடன் தீர செவ்வாய்க்கிழமையில், இந்த விஷயத்தை மட்டும் செய்யுங்கள்.! படிப்படியாக கடன் குறையும்.!


Loan issue solved on sevvai horai 

இப்போதெல்லாம் கடன் வாங்குவது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது. வீட்டு கடனிலிருந்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடன் என்று வங்கிகளின் கடன் கொடுப்பதுடன், தனி நபரிடம் வட்டிக்கு வாங்குவது என்று கடன் பல வழிகளில் கிடைக்கிறது. எளிதாக கடன் கிடைக்கிறது என்று பலரும் அதை வாங்கி பயன்படுத்திவிட்டு அதன் பின் அதை கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்படி அவதிப்படுபவர்கள் கீழே கூறப்படும் ஒரு சிம்பிளான விஷயத்தை செய்தாலே போதும் உங்கள் கடன் எது விரைவில் அடைந்து விடும். 

loan

செவ்வாய்க்கிழமையில் வரும் செவ்வாய் ஹோரை நேரத்தில் நாம் செலுத்த வேண்டிய கடனை கொடுக்க வேண்டும். அதாவது அந்த செவ்வாய் ஹோரை நேரத்தில் நாம் கொடுக்க வேண்டிய கடனிலிருந்து ஒரு சிறு பகுதியை கடனிற்க்கு கட்ட வேண்டும். தனி நபரிடம் வாங்கிய கடனாக இருந்தால் அந்த நேரத்தில் அவரை சந்தித்து, கடன் கொடுக்க வேண்டிய பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை அவரிடம் கொடுக்கலாம். 

அப்படி இல்லாமல், வங்கி கடனாக இருக்கும், செவ்வாய் ஹோரையில் அதற்கான சிறு தொகையை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். 

loan

செவ்வாய் ஹோரையை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்? ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் மூன்று முறை செவ்வாய் ஹோரை வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை.

அடுத்தது மதியம் 1 மணி முதல் 2 மணி வரை செவ்வாய் ஹோரை. 3-வதாக வரும் ஹோரை நாளை 6:00 மணிக்கு மேல் என்பதால் அதில் கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடாது. பொழுது சாய்ந்த பிறகு பண பரிவர்த்தனைகளை எக்காரணத்தை கொண்டும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு செவ்வாய் ஹோரையில் ஒரு ₹.100 ரூபாயாவது நாம் செலுத்தும் போது நமது கடன் வெகு விரைவில் அடைந்து நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.