கார்த்திகை மாத பௌர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?.!



Karthigai Pournami Girivalam: Special Date and Auspicious Timings for Thiruvannamalai Pilgrimage

கார்த்திகை மாத பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த விஷயங்களை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சிவனை வழிபடுவது மன அமைதி, செல்வ வளம் ஆகியவற்றை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதே நேரத்தில் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வது சிவ பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாவங்களை போக்கி புண்ணியம் தரும் தன்மை கொண்ட திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முக்தியை அருளக்கூடியது. 

கார்த்திகை தீபம்:

குறிப்பாக கார்த்திகை மாத பௌர்ணமியில் ஜோதி வடிவமாக காட்சி அளிக்கும் சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்குவது நல்லது என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டுக்கான கார்த்திகை நட்சத்திரம் திருக்கார்த்திகை தீபத் திருநாளாக டிசம்பர் 03-ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. பௌர்ணமி திதி 04-ஆம் தேதி தொடங்குகிறது என்பதால் கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் டிசம்பர் 04-ஆம் தேதியை தேர்வு செய்வது நல்லது. 

இதையும் படிங்க: சிவ பெருமானுக்கு உகந்த நாளான நவம்பர் 3ம் தேதி இப்படி விரதம் இருந்தால் செல்வ யோகம்! ஆபத்தை தடுத்து நிறுத்தும் விஷேஷ நாள்!

Karthigai Pournami

பௌர்ணமியில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

டிசம்பர் 04-ஆம் தேதி காலை 7:55 மணிக்கு பௌர்ணமி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை 3.55க்கு முடிகிறது. திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டு இருக்கும் பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் சென்று வழிபாடு செய்து முடிக்கலாம். இதனால் செல்வ ஞானம் பெருகும். குருவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் முன்னோர்களுக்கு இறுதி சடங்கு செய்யாதவர்கள் பித்ரு தர்ப்பண காரியங்களையும் திருவண்ணாமலையில் மேற்கொள்ளலாம்.