பெரும் அதிர்ச்சி! படம் பார்த்து கொண்டிருக்கும் போது தியேட்டரில் உயிரைவிட்ட ரசிகர்!
போகி பண்டிகை: "பழையன கழிதலும்... புதியன புகுதலும் "...! வீட்டில் செல்வம் சேர போகியை இப்படி கொண்டாடுங்க! செய்ய வேண்டிய முக்கிய சடங்குகள் இதுதான்!
பழையவற்றை விடுத்து புதிய தொடக்கத்தை வரவேற்கும் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மனதிலும், வீட்டிலும் மாற்றம் ஏற்படுத்தும் இந்த நாள் மக்கள் வாழ்வில் நம்பிக்கையும் புதுப்பொருளையும் தருகிறது.
போகி பண்டிகையின் அர்த்தம்
"பழையன கழிதலும்... புதியன புகுதலும்" என்பதே போகி பண்டிகையின் அடிப்படை நோக்கமாகும். சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை தெற்கிலிருந்து வடக்குக்கு தொடங்கும் நாளை மகர சங்கராந்தி என அழைக்கிறோம். அந்த மாற்றத்தின் முன்னோட்டமாகவே போகி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் தீய எண்ணங்களை விட்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டுமென உணர்த்தும் நாளாக போகி விளங்குகிறது. 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை வருகிறது.
இந்திரன் வழிபாடு முக்கியத்துவம்
மழையின் கடவுளான இந்திரனை வழிபடுவதற்குரிய நாளாக போகி கருதப்படுகிறது. விவசாயிகள் நல்ல மழை கிடைத்து விளைச்சல் பெருக வேண்டுமென வேண்டிக்கொள்வார்கள். ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெருக இந்திரனின் அருள் தேவை என நம்பப்படுகிறது. இயற்கைக்கு நன்றி கூறி ஆசீர்வாதம் பெறும் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: வியாழன் பிரதோஷமான இன்று சிவபெருமானை இப்படி வழிபடுங்க! வாழ்க்கை வளம் பெரும்....
மாநிலங்கள் தோறும் போகி
தென்னிந்தியாவில் போகி என்ற பெயரிலும், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் லோஹ்ரி என்றும், அசாமில் மகி ப்ரு அல்லது போகாலி ப்ரு என்றும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பெயர்கள் மாறினாலும், விவசாய செழிப்புக்காக பிராரத்திக்கும் நோக்கம் ஒன்றே.
போகியில் செய்ய வேண்டியவை
போகி நாளில் வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்து அலங்கரிக்க வேண்டும். புதிய அரிசி மாவில் மாக்கோலம் இட்டு, நடுவில் மாட்டுச் சாணம் வைத்து பூசணிப்பூ அலங்கரிக்க வேண்டும். விவசாய கருவிகளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். சூரிய பகவான், பூமாதேவியை வணங்கி விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம்.
போகி சடங்குகள்
சில பகுதிகளில் தேவையற்ற பழைய பொருட்களை தீயில் எரிக்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் பாடல்கள் பாடி தீயை சுற்றி வணங்குவார்கள். குடும்பங்கள் ஒன்று கூடும் நாளாக போகி அமைகிறது. விளைச்சல், பழங்கள், வருமானம் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது. பட்டம் விடுதல், பாரம்பரிய விளையாட்டுகள் நடத்துவதும் காணப்படுகிறது.
இந்த போகி பண்டிகை மூலம் பழையன கழிதல் என்ற தத்துவத்தை பின்பற்றி, புதிய தொடக்கம் மேற்கொள்ள வேண்டும். இயற்கைக்கு நன்றி கூறி, விவசாயத்தை மதித்து, ஒற்றுமையுடன் போகி பண்டிகை கொண்டாடுவது அனைவருக்கும் நன்மையை தரும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: மார்கழி மாத கடைசி அமாவாசை... இன்று மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
-sh8t9.jpeg)