தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வீட்டில் பணமழை கொட்டுவதற்கு இந்த ஒரு பொருளை சமையலறையில் வைத்து பாருங்க.!?
ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை
பொதுவாக நம் வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அதிர்ஷ்டம் துணை இருந்தால் வாழ்வில் பல விஷயங்களையும் சாதித்து விடலாம் என்று பலரும் கருதுகின்றனர். குறிப்பாக பணம் விஷயத்தில் பலருக்கும் அதிர்ஷ்ட மழை கொட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன்படி பணமழை வீட்டில் கொட்டுவதற்கு சமையலறையில் இந்த பொருட்களை வைத்திருந்தால் போதும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
பணம்
பெருக வீட்டில் வைக்க வேண்டிய பொருட்கள்
1. அரிசி
- செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம் போன்றவற்றை குறிப்பிடும் அடையாளங்களை கொண்டுள்ளது இந்த அரிசி. சமையல் அறையில் எப்போதும் ஒரு ஜாடியில் முழுவதுமாக அரிசி நிரப்பி வைத்து விட்டால் வீட்டில் பண மழை கொட்டும் என்று நம்பபடுகிறது.2. இஞ்சி - சமையலுக்காகவும், நோய்களை தீர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் வாசனை பொருள் இஞ்சி. இது செல்வம் மற்றும் வெற்றியின் அறிகுறியாக கருதப்பட்டு வருகிறது. எனவே ஒரு துண்டு இஞ்சி எப்போதும் சமையலறையில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தருவதோடு, பண வாய்ப்புகளை பெருக்கும்.
3. உப்பு - உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படும் உப்பை எப்போதும் வீட்டில் தீர்ந்து போகாமல் வைத்திருப்பது நல்லது.
4. துளசி - சமையல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்காக மட்டுமல்லாமல் பல ஆன்மீக நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. துளசியை ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான செடியாக கருதி வருவதால் இதை எப்போதும் வீட்டில் வைத்திருப்பது நல்லது.
இதையும் படிங்க: ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோயில்.! தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?
5.
பிரியாணி இலை - இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களில் பணத்தை ஈர்க்கும் மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்கான அறிகுறியாக பிரியாணி இலைகள் கருதப்பட்டு வருகிறது என்பதால் பணப்பை மற்றும் பணம் வைக்கும் இடங்களில் பிரியாணி இலைகளை வைப்பது நல்லது.
மேலே குறிப்பிட்ட பொருட்களை வீட்டிலோ அல்லது சமையலறையில் எப்போதும் வைத்திருப்பது வீட்டில் பண மழையை கொட்ட வைக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நம் முன்னோர்களும் நம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: சந்திராஷ்டமம் நாளில் கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யக்கூடாது.? ஏன் தெரியுமா.!?