மேஷ ராசிக்காரர்களே.! இந்த புத்தாண்டில் மறந்தும் கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்.!



2024-rasi-palan-for-mesham

வேகமும், துடிப்பும் மிக்க மேஷ ராசி நபர்களே, விரைவில் பிறக்க உள்ள ஆங்கில புத்தாண்டில் உங்களுக்கு ஏற்படவிருக்கும் அசுப மற்றும் சுப பலன்கள் என்னென்ன என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் மனதிலிருந்து வந்த பல்வேறு குழப்பங்கள் மெல்ல, மெல்ல குறைய தொடங்கும். தாய் மாமன்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். திருமணமான நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரலாம். கோவில் தொடர்பான வேலைகளில் தெளிவும், ஆர்வமும் உண்டாகும். தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மனதில் சில குழப்பங்கள் எழுவதால், முடிவுகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படும். குலதெய்வத்திற்கான நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். விருந்தாளிகளின் வருகையால், வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். பணி குறித்த பல புதிய வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையலாம்.

மேஷம்ஆடம்பர சிந்தனைகள் மற்றும் பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செயல்பாடுகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையலாம். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

உடலில் இருந்த எலும்பு குறித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மீக பணிகள் செய்வதன் மூலமாக நன்மை உண்டாகும். தெளிவாக சிந்திப்பீர்கள். உடலிலிருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.

புதிய திட்டங்களை வகுப்பீர்கள், வியாபாரம் குறித்த பழைய சிந்தனையால் மனச்சோர்வு ஏற்படலாம். மறுசுழற்சி முறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.

மேஷம்அரசியல்வாதிகளின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கட்சி தொடர்பான உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது மிகவும் நன்று. கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. வித்தியாசமான அணுகுமுறையின் மூலமாக சூழ்நிலைகள் மாறலாம். 

மாணவ, மாணவிகள், கல்வி பயில்வதில் கவனத்தோடு இருப்பது அவசியம். மேல்நிலை கல்வியிலிருந்து வந்த குழப்பம் குறைய வாய்ப்புள்ளது. உயர்கல்வி பயில்பவர்கள் ஆலோசனைகள் கேட்டு நடப்பதன் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தலாம். தடைபட்டு வந்த பட்டம் குறித்த படிப்புகளை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கைக்கூடிவரும். புதிய நபர்களின் தன்மைகள் அறிந்து பழக வேண்டும். அதேபோல பேச்சில் விவேகம் இருப்பது அவசியம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் உண்டாகலாம். உயரதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது அவ்வப்போது சிற்சில குற்றச்சாட்டுக்கள் வந்து நீங்கும். பணி நிமித்தம் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் சூழல் ஏற்படலாம். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

பெண்களுக்கு பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவுகள் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். விளையாட்டுத்தனமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நம்பிக்கையான நபர்கள் தொடர்பான புரிதல்கள் அதிகரிக்கும். உங்கள் மீது விழுந்த வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். உடனிருப்பவர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பகிர வேண்டாம். விலையுயர்ந்த பொருட்கள் மீது கவனத்தோடு இருப்பது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு காரியத்தை செய்வது நன்மை தரும்.