சோகத்திலும் ஒரு கிலுகிலுப்பு! யுவராஜின் ஓய்வால் இணைந்த முன்னாள் காதலி மற்றும் மனைவி - TamilSpark
TamilSpark Logo
சினிமா விளையாட்டு

சோகத்திலும் ஒரு கிலுகிலுப்பு! யுவராஜின் ஓய்வால் இணைந்த முன்னாள் காதலி மற்றும் மனைவி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் யுவராஜின் எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவ்ராஜ் சிங். அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். 2011 உலகக்கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதை யுவராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கிரிக்கெட்டில் புகழின் உச்சியில் இருந்த யுவ்ராஜ் தன் சொந்த வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களையும் சந்தித்துள்ளார். பெண்களுக்கு மிகவும் பிடித்தவரான யுவராஜ் சிங்க் திரைப்பட நடிகைகள் கிம் சர்மா மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் நெருங்கி பழகி வந்ததாக அப்போது செய்திகள் வந்தன.

இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் மாடலிங் மற்றும் திரைப்படங்களில் சிறந்து விளங்கிய ஹேசல் கீச் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கீச் நேற்று தனது கணவர் ஓய்வினை அறிவித்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "இந்த அத்தியாயம் முடிந்தது, என் கணவரை நினைத்து பெருமையாக உள்ளது. அடுத்த வாழ்க்கையில் அடியெடுத்து வைப்போம், லவ் யூ யுவராஜ்" என தெரிவித்துள்ளார்.

யுவராஜின் மனைவியின் அதே பதிவில் அவரது முன்னாள் காதலியான கிம் சர்மாவும் யுவராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "உங்கள் இருவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo