இந்தியா விளையாட்டு

உங்களுடன் கைகுலுக்கியதை கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன்! யுவராஜ்சிங் ஓப்பன் டாக்!

Summary:

yuvaraj talk about sachin

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் இன்று வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. அதேபோல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்களுக்குள் உரையாடிவருகின்றனர்.

விளையாட்டு வீரர்களின் உரையாடல்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது விருந்தாய் அமைந்துள்ளது. அந்தவகையில், சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் “யுவராஜ்சிங்கால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும்" என்று அவரை புகழ்ந்து ஒரு டுவிட்  வெளியிட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்த யுவராஜ்சிங் “நான் உங்களை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன். கடினமான காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்து என்னை வழிநடத்தினீர்கள். என் திறமை மீது நம்பிக்கை வைக்க கற்று கொடுத்தீர்கள் என தெரிவித்தார்.


Advertisement