36 வயதிலும் பறந்து விழுந்து கேட்ச் பிடித்த இந்திய வீரர்! அந்த வீடியோவை வெளியிட்ட அவரது சகோதரர்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

36 வயதிலும் பறந்து விழுந்து கேட்ச் பிடித்த இந்திய வீரர்! அந்த வீடியோவை வெளியிட்ட அவரது சகோதரர்!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு உள்நாட்டு போட்டிகளையும் இளம் வீரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயற்சித்து வருகின்றனர். இந்திய அணிக்கு தேர்வாகும் ஆசையில், முடிந்த வரையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. அந்த தொடரில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யூசுப் பதான் அவரது சிறப்பான பீல்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவா மற்றும் பரோடா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது, அதிரடியாக 18 பந்துகளில் 27 ரன்கள் அடித்த தர்ஷன் மிசால் கேட்சை யூசுப் பதான் வேகமாக பாய்ந்து கேட்ச் பிடித்துள்ளார்.  இந்த நிலையில் அவர் கேட்ச் பிடிக்கும் வீடியோவை அவரது சகோதரரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo