உலகக்கோப்பை நடைபெறும் நேரத்தில், பந்து தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி மரணம்!

உலகக்கோப்பை நடைபெறும் நேரத்தில், பந்து தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி மரணம்!


young-player-dies-after-ball-hits-on-neck

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நேரத்தில் இளம் வீரர் ஒருவர் கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் 18 வயதான ஜஹாங்கீர் அகமது வார். இவர் அரசு சார்பில் நடத்தப்பட்ட 19 வயத்துக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் பேட்டிங் செய்துகொண்டிருந்த அகமது வேகமாக வந்த பந்தை அடித்து ஆட முயற்சித்துள்ளார். ஆனால் பந்து அவரது கழுத்தில் தாக்கியுள்ளது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார் அகமத். உடனே அவரது நண்பர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனனர்.

ஆனால், அகமது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அகமது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தும் இந்த சமப்வம் நடந்துள்ளது. இறந்த அகமது 11 வகுப்பு படித்து வந்துள்ளார். இளம் வீரர் ஒருவர் பந்து தாக்கி உயிரிழந்துள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

World cup 2019