உலகம் விளையாட்டு

WWE போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் கவிதா தேவி; பயிற்சியாளர் யார் தெரியுமா? தி கிரேட் காளி.!

Summary:

wwe the indian player kavitha devi.

 WWE மல்யுத்த போட்டியின் இந்திய வீரர் தி கிரேட் காளியின் பயிற்சியில் இந்திய வீராங்கனை கவிதா தேவி தேர்வாகியுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது WWE என்கின்ற பொழுதுபோக்கு மல்யுத்த போட்டி. இந்தியாவிலும் இப்போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு ஒரு காலத்தில் கலக்கியவர் தி கிரேட் காளி(திலீப் சிங் ரானா).

Image result for wwe kavita devi india

தற்போது அவரது பயிற்சி கீழ் இந்தியாவின் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மற்றும் பெண் கல்வி மிகவும் குறைவாக உள்ள மாநிலமான ஹரியானாவில் இருந்து WWE மல்யுத்த போட்டியின் பெண்களுக்கான பிரிவில்  கவிதா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இளம் வயது முதலே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த கவிதா தேவி இந்தியாவின் சார்பில் பழுதூக்கும் போட்டியில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். 

மேலும் ராணுவத்தில் காவலராக பணிபுரிந்த இவருக்கு துணை காவல் மேலாளர் பதவி உயர்வு கிடைத்தாலும் அதை ராஜினாமா செய்துவிட்டு போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது


 


Advertisement