விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடம்? முழு விவரம் இதோ!

Summary:

World cup cricket teams points table

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 23 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் ஆத்ரேலியா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், அதே 7 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆறு புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4 வது இடத்திலும் உள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றதன்மூலம் 5 புள்ளிகள் பெற்று வங்கதேச அணி 5 வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 6 வது இடத்திலும் உள்ளது. 5 போட்டிகளில் மூன்று புள்ளிகள் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி, தென்னாபிரிக்கா அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7 , 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளது.

இதுவரை நான்கு போட்டிகளில் ஒருபோட்டியில் கூட வெற்றிபெறாத ஆப்கானிஸ்தான் அணி 0 புள்ளிகளுடன் கடைசி இடமான 10 வது இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement