விளையாட்டு

உலகக்கோப்பை 2019 :அணிகளின் தற்போதைய புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!

Summary:

World cup cricket 2019 teams points table up to match 9

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. மொத்தம் 10 அணிகள் விளையாடிவரும் முதல் சுற்றில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிபட்டபாடையில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு புள்ளிகளுடன் இரண்டாது இடத்திலும் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டும் விளையாடி இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து அணி அதே இரண்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

தென்னாப்ரிக்காவுடனான நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இட்டதில் உள்ளது. பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த அணைத்து போட்டிகளிலும் தோல்வி பெற்று தென்னாபிரிக்க அணி 9 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 10 வது இடத்திலும் உள்ளது.


Advertisement