விளையாட்டு

பாகிஸ்தான் கேப்டனை சொந்த மக்களே கலாய்க்கும் பரிதாபம்! ஒரு கொட்டாவியால் வந்த வினை.!

Summary:

world cup 2019 - india vs pakistan - sarfraj khan

இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடர் போட்டியில் கொட்டாவி விட்ட பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜை கொட்டாவி விடும் பாண்டா.. என்று பாகிஸ்தான் மக்களே கலாய்த்து வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டும் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. 

மழையால் ஆட்டம் தடைபடுமோ என்று ரசிகர்கள் மத்தியில் அச்சம் நிலவிய நிலையில் சிறிது நேரம் தடைபட்டாலும் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 337 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாததால் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணி கடைசி 20 பந்துகளை எதிர்கொள்ள மழை குறுக்கீடுக்கு பின் வந்த போது, சர்ப்ராஜ் கொட்டாவி விட்டதை கேமிரா மேன் கச்சிதமாக படம் பிடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் டீ & பக்கோடா சாப்பிட்டு வந்தால் களத்தில் தூக்கம் தான் வரும் என மரண கலாய் கலாய்க்க துவங்கினர். 

தொடர்ந்து பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததையடுத்து ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கொட்டாவி விடும் பாண்டா என படுகேவலமாக அசிங்கப்படுத்தி வருகின்றனர்.   


Advertisement