விளையாட்டு

தயவுசெய்து கெட்ட வார்த்தை பயன்படுத்த வேண்டாம்; ரசிகர்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான் வீரர்கள்.!

Summary:

world cup 2019 - india vs pakistan - angry pakistan fans

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்களைத் தவிர உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மான்செஸ்டர் மைதானத்தில் கூடினர்.

மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் ஊரும் திரும்பினர். இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் மற்றும் வீரர்கள் மேல் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையான கோபத்தில் உள்ளனர். மேலும் வீரர்களின் மீது பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். போட்டியின் முதல் நாள் இரவு சோயிப் மாலிக், இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் உள்ளிட்ட சில வீரர்கள் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டது தான் இந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் அவர்களை கடுமையாக திட்டி வருகின்றனர்.  

பல ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளால் பாகிஸ்தான் வீரர்களை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தயவு செய்து கெட்ட வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம். எங்களின் செயல்பாட்டை விமர்சிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. மீண்டு வருவோம், அதற்கு உங்களின் ஆதரவு தேவை.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல சோயிப் மாலிக் உள்ளிட்ட பல பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களிடம் கதறாத குறையாக கொஞ்சி வருகின்றனர்.


Advertisement