விளையாட்டு

'யானைக்கும் அடி சறுக்கும்' ஆப்கானிஸ்தான் அருமையான பந்துவீச்சு; சொதப்பலாக வெளியேறிய ரோகித் சர்மா.!

Summary:

world cup 2019 - india vs afganistan match today

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 27 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 28 ஆவது போட்டியாக இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்திய அணியில் காய மடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி வாய்ப்பு பெற்றார். 

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளை எளிதாக வீழ்த்திய இந்திய அணி இன்றைய போட்டியில் டாஸ் வின் செய்து பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த ரோகித் சர்மா இன்றைய போட்டியிலும் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கி ஆடி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணியின் அருமையான கட்டுக்கோப்பான பந்து வீச்சினால் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் மெதுவாகவே ரன்களை சேகரித்து வந்தனர். இந்நிலையில் 30 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த கேஎல் ராகுலும் தனது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார்

முடிவில் இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறது. விராட் கோலி 34 ரன்களும் விஜய் சங்கர் 4 ரன்களும் எடுத்து உள்ளனர்.


Advertisement