உலக கோப்பையை வெல்லப்போவது யார்? எப்போது துவங்குகிறது இந்த ஆட்டம்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்!

உலக கோப்பையை வெல்லப்போவது யார்? எப்போது துவங்குகிறது இந்த ஆட்டம்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்!



women worldcup final start time


பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்தநிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி நிறுத்தப்பட்டு 'ஏ' பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதனையடுத்து மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. அந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

worldcup

இந்த நிலையில் உலக கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி வீராங்கனைகள்: 
                                                  ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட்.

ஆஸ்திரேலி அணி வீராங்கனைகள்: 
                                               பெத் மூனி, அலிசா ஹீலி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், ஜெஸ் ஜோனஸ்சென், நிகோலா கேரி, டெலிசா கிம்மின்ஸ், வார்ஹாம் அல்லது மோலி ஸ்டிரானோ, சோபி மோலினெக்ஸ், மேகன் ஷூட்.