சொந்த மண்ணில் நியூசிலாந்தை மண்ணை கவ்வ வைத்த இந்திய அணி! ஒருநாள் போட்டிகளில் இருந்து வில்லியம்சன் விலகல்!

சொந்த மண்ணில் நியூசிலாந்தை மண்ணை கவ்வ வைத்த இந்திய அணி! ஒருநாள் போட்டிகளில் இருந்து வில்லியம்சன் விலகல்!



williamson not play in one day

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று நாளை நடக்கவிருக்கும் ஒருநாள் போட்டிக்கு தயார் ஆகி வருகிறது.

இந்தநிலையில் நடந்துமுடிந்த மூன்றாவது டி-20 போட்டியில் பீல்டிங் செய்த போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விலகினார். இவருக்கு பதிலாக டிம் சவுத்தி கேப்டனாக களமிறங்கினார். இதற்கிடையில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரில் வில்லியம்சன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து வில்லியம்சன் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக டாம் லேதம் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.