கடைசி ஒரு ரன்னில் புதிய சாதனை படைத்த வில்லியம்சன்!

கடைசி ஒரு ரன்னில் புதிய சாதனை படைத்த வில்லியம்சன்!


Williamson new record in worldcup

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் அனல் பறக்க பந்து வீசினர். முதல் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் மார்டின் கப்டில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

wc2019

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் மிகவும் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க நீண்ட நேரம் போராடிய இந்திய அணிக்கு 19 ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஜடேஜாவின் பந்தில் நிகால்ஸ் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் 35 ஓவர்கள் வரை நிதானமாக ஆடினர். அரை சதம் அடித்த வில்லியம்சன் 26ஆவது ஓவரில் 67 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்தில் ஆட்டமிழந்தார். இதோடு வில்லியம்சன் இந்த உலகக்கோப்பையில் மட்டும் 548 ரன்கள் எடுத்துள்ளார். 

wc2019

இதன்மூலம் ஒரு உலகக்கேப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் மார்ட்டின் கப்டில் 547 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது ஒரு ரன்னில் அந்த சாதனையை முறியடித்துள்ளார் வில்லியம்சன்.