உச்சகட்ட பரபரப்பில் 4 வது டெஸ்ட்: வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?!!..

உச்சகட்ட பரபரப்பில் 4 வது டெஸ்ட்: வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?!!..


Will India win the 4th Test match against Australia?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 4 வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 180, ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 114 ஆகியோரின் சிறப்பான பேட்டிங் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் (128), விராட் கோலி (186) இருவரும் சதம் விளாசினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்தது. 3 வருடங்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட் கோலி 75 சர்வதேத சதங்களுடன் புதிய மைல் கல்லை எட்டினார்.

நேற்றைய போட்டியில் 6 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் இந்திய அணி ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 2 வது இன்னிங்ஸை தொடங்கியது.  டிராவிஸ் ஹெட்டுடன், குன்மேன் நைட் வாட்ஸ்மேனாக ஆட்டத்தை தொடங்கினார். 6 ஓவர்கள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்தது. இன்னும் 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 1 நாள் ஆட்டம் எஞ்சியுள்ளதால் இந்த போட்டியை டிரா செய்ய ஆஸ்திரேலிய அணி முயற்சி செய்யும்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றுவதுடன் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

மேலும் டெஸ்ட் அணிகளுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும். ஏற்கனவே 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, டெஸ்ட் போட்டியிலும் முதலிடத்தை பிடிக்கும் பட்சத்தில் இந்த மைல் கல்லை எட்டிய முதல் அணி என்ற பெயரை பெறும்.