
Who will qualify this semifinal team
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்குள் நுழைய இங்கிலாந்து அணி போராடி வருகிறது.
10 நாடுகள் கலந்து கொண்டுள்ள உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகள் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இழந்தன.
தற்போது மீதமுள்ள 2 இடங்களுக்கான போட்டி நிலவி வருகிறது. இதில் ஒரு அணியினை தீர்மானிக்கும் பரபரப்பான போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் 3 மற்றும் 4 ஆவது இடங்களில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் மூன்றாவது அணியாக முன்னேறும். இரு அணிகளுக்கும் இது தான் கடைசி லீக் போட்டி. எனவே தோல்வியுறும் அணி அடுத்து நடைபெறும் பாக்கிஸ்தான்-பங்களாதேஷ் ஆட்டத்திற்காக காத்திருக்க வேண்டும். அந்த போட்டியில் பாக்கிஸ்தான் வென்றால் ரன்ரேட் அடிப்படையில் 4 ஆவது அணி அரையிறுதிக்குள் நுழையும்.
இன்றைய போட்டியில் ஒருவேளை இங்கிலாந்தும், பங்களாதேஷூடன் பாக்கிஸ்தானும், இலங்கையுடன் இந்தியாவும் மிக மோசமாக தோல்வியுற்றால் அரையிறுதிக்குள் நுழைய இலங்கை அணிக்கும் வாய்ப்பு உள்ளது.
Advertisement
Advertisement