சென்னை அணி இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பு எப்படி இருக்கு? சின்ன புள்ளிவிவரம்

சென்னை அணி இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பு எப்படி இருக்கு? சின்ன புள்ளிவிவரம்


which-place-will-csk-get-after-first-round

மார்ச் 23ஆம் தேதி துவங்கிய 12ஆவது ஐபிஎல் சீசனில் இதுவரை  48 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. 

8 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளேஆஃப் சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளன. இந்த சுற்றிற்கு முன்னேறும் அடுத்த இரண்டு அணிகள் எவை மற்றும் புள்ளிபட்டியலில் யாருக்கு எந்த இடம் போன்றவைகளை தீர்மானிக்கும் அடுத்த 8 போட்டிகள் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.

IPL 2019

நேரடியாக அரையிறுதி போட்டி இல்லாமல் ப்ளேஆஃப் சுற்றுகளான குவாலிபயர்-1, எலிமினேட்டர், குவாலியர்-2 என மூன்று போட்டிகளின் முடிவை பொறுத்தே எந்தெந்த அணிகள் இறுதிபோட்டியில் ஆடும் என தீர்மானிக்கப்படும். 

இந்நிலையில் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்றாலே முதல் இரண்டு இடங்களில் ஒன்றை தக்கவைத்துகொள்ள முடியும். இதன் மூலம் குவாலிபயர்-1ல் தோற்றாலும் மீண்டும் குவாலிபயர்-2ல் ஆடி இறுதிபோட்டிக்கு முன்னேர வாய்ப்பு கிடைக்கும். இதிலும் ஒரு சிக்கல் என்னவெனில் மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் நிச்சயம் தோற்க வேண்டும். 

IPL 2019

அடுத்ததாக சென்னை இரண்டு போட்டிகளிலும் தோற்றாலும், முதல் இரண்டு இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழலில் மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும், ஹைதராபாத் அணி ஒரு போட்டியிலும் நிச்சயம் தோற்க வேண்டும். 

ஆனால் சென்னை அணி இரண்டு போட்டிகளிலும் தோற்று, மும்பை அணி ஒரு போட்டியிலோ அல்லது ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுவிட்டால் சென்னை அணிக்கு மூன்றாவது அல்லது நான்காவது இடம் தான் கிடைக்கும். 

IPL 2019

இந்த சூழ்நிலையில் எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர்-2 ஆகிய இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு சென்னை அணியால் முன்னேற முடியும். டூ ப்ளஸிஸ் இல்லாத சென்னை அணியில் தோனி மற்றும் ஜடேஜா முழு உடல் தகுதியுடன் இல்லையென்றால் இறுதி போட்டிக்கு செல்வது சிரமம் தான் என்ற சந்தேகம் சற்று வலுத்து வருகிறது.