இந்திய அணிக்கு எதிராக மிக பலம் வாய்ந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி!West indies vs india team players list

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14 ஆம் தேதி முடிவடைந்தது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடிய இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் முறையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது T20 போட்டிக்கான தங்கள் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

WI vs IND

கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), ஜான் காம்ப்பெல், எவின் லெவிஸ், சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலா பூரன், கீரோன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், கீமோ பால், சுனில் நரைன், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், அந்தோனி பிராம்பிள், ஆண்ட்ரே ரஸ்ஸல், கரிபியர்.