விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் அதிரடி மாற்றம்! புதிய கேப்டனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர்!

Summary:

west indies new captain


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை.

இந்தநிலையில், தொடர் தோல்வியை சந்தித்து வரும் அந்த அணியின் கேப்டன்களை மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

போலார்டு இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 போட்டிகளில் பங்கேற்று, 2289 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டரும், டி20 அணியின் கேப்டனாக பிராத்வைட்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement