இந்தியா விளையாட்டு

வார்னர்.. என்னா மனசுயா உனக்கு.. எதிர் அணி வீரர்னு கூட பார்க்காமல் எப்படி பேசுறாரு பாருங்க.. ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ!

Summary:

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் தமிழில் வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் தமிழில் வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் வலைப்பந்து வீச்சாளராகா கலந்துகொண்டு. பின்னர் ஒருநாள், T20 , டெஸ்ட் என முத்தரப்பு போட்டிகளிலும் விளையாடி சிறப்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் தமிழக வீரர் நடராஜன்.

இந்நிலையில் நடராஜனுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவரும்நிலையில், இந்திய அணியுடன் படுதோல்வியை சந்தித்த எதிர் அணியான ஆஸ்திரேலிய அணியின் மிக சிறந்த வீரர்களில் ஒருவரான வார்னர் நம்ம நடராஜனை தமிழில் புகழ்ந்து தள்ளி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "வாழ்த்துக்கள் நட்டு.. வாழ்த்துக்கள் நட்டு" என பேசியுள்ள வார்னர், "உண்மையிலேயே நீங்கள் மிகப் பெரிய லெஜண்ட். இதை நான் பலமுறை கூறியுள்ளேன். களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, நீங்கள் ஒரு சிறந்த மனிதர். அதனை மீண்டும் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்களோடு ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது" என வார்னர் கூறியுள்ளார்.

தனது அணியை தோற்கடிக்க மிக முக்கிய காரணமாக இருந்த எதிர் அணி வீரர் என்றும் கூட யோசிக்காமல், இந்திய வீரரை பாராட்டி பேசிய ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

ஐபில் போட்டியில் வார்னர் கேப்டனாக இருக்கும் ஹைத்ராபாத் அணிக்காக நடராஜன் விளையாடிவருகிறார். ஐபில் போட்டியில் நடராஜனுக்கு பல்வேறு வாய்ப்புகளை கொடுத்து, அவரை இன்று உலகரியவைத்த பெருமை வார்னரையே சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Advertisement