விளையாட்டு

WC2019: "ஆரம்பத்தில் பதட்டமாக தான் இருந்தது" ஒரு வருடத்திற்கு பிறகு ஆடிய வார்னர் பரபரப்பு பேச்சு

Summary:

warner talked about first innings after one year

நேற்று ஆபிகானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 89 ரன்களை குவித்த வார்னர் ஆரமபத்தில் பதட்டமாக தான் இருந்தது பின்னர் பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு பழகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர் ஒரு ஆண்டு தடைக்கு பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். ஓராண்டு தடைக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் ஆடிய வார்னர், ஆஸ்திரேலியா அணிக்காக நேற்று தான் முதல் போட்டியில் ஆடினார்.

தொடர்புடைய படம்

ஒரு ஆண்டு இடைவேளைக்கு பிறகு தனது சொந்த அணிக்காக ஆடிய வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 89 ரன்கள் குவித்தார். 114 பந்துகளை சந்தித்த வார்னர் 8 பௌண்டரிகள் மட்டுமே அடித்தார். சிக்ஸர் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் ஆரமபத்தில் வார்னர் சற்று பதட்டமாகவே ஆடியது போல தான் தோன்றியது. கேப்டன் பின்ச் தான் அதிரடியாக ஆடினார்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதினை பெற்ற வார்னர் பேசியபோது, " ஒரு ஆண்டிற்கு பிறகு தனது அணிக்காக ஆடியதால் ஆரமபத்தில் சற்று பதட்டமாக தான் இருந்தது. ஆனால் பின்ச் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி எனக்கு நிறைய நேரம் கொடுத்தார். மேலும் இலக்கு வெறும் 208 ரன் தான் என்பதால் எனக்கு ஆட்டத்தில் செட்டில் ஆக நிறைய நேரம் கிடைத்தது" என தெரிவித்துள்ளார்.


Advertisement