விராட் கோலியை சீண்டினால் உங்களுக்குதான் பிரச்னை! டேவிட் வார்னர் ஓப்பன் டாக்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

விராட் கோலியை சீண்டினால் உங்களுக்குதான் பிரச்னை! டேவிட் வார்னர் ஓப்பன் டாக்!

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் முடங்கியுள்ளன. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளைக் காணமுடியாமல் ரசிகர்கள் அனைவரும் ஏங்கிக் கிடக்கின்றனர்.

விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மும்முரமாக பொழுதைக் கழித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டா பக்கத்தின் நேரலையில் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடவுள்ள நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வார்னர் பேசுகையில், "நான் கூட்டத்தில் தான் வளர்கிறேன், களத்தில் விளையாடும் போது மற்றவர்கள் என்னை சீண்டும் விதத்தாலும் வளர்கிறேன். 

இதுபோன்ற தன்மை விராட் கோலியிடமும் நீங்கள் பார்க்க முடியும். இப்படியான பல கடினமான பாதைகளை அவர் கடந்து வந்துள்ளார். அவர் ஆச்சர்யப்படும் அளவிற்கு விளையாடுகிறார். அதனை நாம் மீண்டும், மீண்டும் பார்த்து வருகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கரடியை உங்களால் சீண்ட முடியாது, அப்படி செய்தால் கடைசியில் நீங்கள் தான் தாக்குதலுக்கு ஆளாவீர்கள் என்று வார்னர் காட்டமாக பேசியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை சீண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வார்னர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo