
நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும், ஐ.பி.எல். சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், நடராஜன் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், டெஸ்ட் போட்டியில் நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து ஓவர்கள் வீச வேண்டும் என்பதால் தொடர்ந்து லெந்தில் வீசி பேட்ஸ்மெனின் பொறுமையைச் சோதிக்கும் திறமை அவரிடம் இருக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் அவரது கேப்டன் என்ற முறையில் கூறுகிறேன், அவர் ஒரு நல்ல பவுலர். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நன்றாக வீச எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement