விளையாட்டு

என்னுடைய இரண்டாவது வீடு இந்தியா.! வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.!

Summary:

டேவிட் வார்னர் தமிழர் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதனையடுத்து T20 முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வார்னர் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் ஆடியதால் அவருக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் அதிகப்படியான ரசிகர்கள் உருவானார்கள். இந்நிலையில் வார்னர் அவரது இன்ஸ்டாகிராமில் தமிழர் கெட்டப்பில் இருப்பதுபோல வரையப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ’என்றும் இந்தியன்’ என பதிவிட்டார். அதற்கு ரிப்ளை செய்த வார்னர், ’என்னுடைய இரண்டாவது வீடு இந்தியா’ என பாசமாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement