விளையாட்டு

திடீரென ஐபில் அணியை விட்டு வெளியேறிய முக்கிய வீரர்! சோகத்தில் ரசிகர்கள்!

Summary:

Warner left from sun rises tram ipl 2019

ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தலா 16 புள்ளிகளுடன் டெல்லி மற்றும் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. மும்பை மற்றும் கைதராபாத் அணிகள் மூன்று மற்றும் நான்காம் இட்டதில் அடுத்த சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் கைதராபாத் அணி 45 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. கைதராபாத் அணியின் வீரர் வார்னர் 56 பந்துகளில் 81 ஓட்டம் எடுத்து வெற்றிக்கு உதவினார். நெற்றியை ஆட்டம் மட்டும் இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பம் முதல் நேற்றுவரை கைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் வார்னர் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் ஆவார்.

கைதராபாத் அணி நான்காவது இடத்தில் உள்ள நிலையில் அடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் வார்னர் கைதராபாத் அணியை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அடுத்தமாதம் இறுதியில் உலகக்கோப்பை போட்டி தொடங்க இருப்பதால் வார்னேர் ஐபில் போட்டியில் இருந்து விலகி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தயாராவதற்காகவே அவர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

வார்னரின் இந்த திடீர் முடிவு கைதராபாத் அணிக்கும், கைதராபாத் அணி ரசிகர்களும் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement