விளையாட்டு

மனைவியுடன் மரண குத்தாட்டம் போட்ட வார்னர்! வைரலாகும் வீடியோ!

Summary:

Warnar dance with his wife

தெலுங்கு, இந்தி பாடலுக்கு மனைவியுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த அனைத்து கிரிக்கெட் அணியினரும், கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  டேவிட் வார்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி அதன் விடியோக்களை டிக் டாக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

சன்ரைசர்ஸ் அணி, இதற்கு முன்னால் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதற்கு வார்னர் முக்கியமாக காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வார்னரின் இந்த விடியோக்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உலக அளவில் வார்னருக்கு தீவிர ரசிகர்கள் உள்ள காரணத்தால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேன்டிசுடன் தெலுங்கு பாடலுக்கு அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement