விளையாட்டு

பிளான் போட்டு விராட் கோலி விக்கெட்டை தட்டி தூக்கிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்.! சோகத்தில் ரசிகர்கள்.!

Summary:

பிளான் போட்டு விராட் கோலி விக்கெட்டை தட்டி தூக்கிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்.! சோகத்தில் ரசிகர்கள்.!

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. 
 
நேற்றய ஆட்டத்தில் களமிறங்கிய விராட் கோலி 2 பந்தை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்னிலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 18 ரன்களிலும் விராட் கோலி ஆட்டமிழந்தார். நேற்றய ஆட்டத்தில் அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் விராட். 

இந்த தொடரின் கடைசி 2 போட்டியிலும் மிக விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்த விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் ரன் மழை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அல்சாரி ஜோசப் தட்டி தூக்கினார் விராட் விக்கெட்டை.


Advertisement