இந்தியா விளையாட்டு

விராட் கோலி அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கபடி வீரர்கள்! தோனியை விட்டுக்கொடுக்காத கோலி!

Summary:

virat tells indian cricket team kabadi players


சனிக்கிழமை வொர்லியில் உள்ள என்.எஸ்.சி.ஐ டோம் நகரில் புரோ கபடி லீக் சீசன் 7 இன் மும்பை தொடக்க ஆட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய விராட் கோலி, கபடி விளையாட அதிகமான வலிமை மற்றும் விளையாட்டுத்திறன் வேண்டும் என்றார்.
 
அங்கு நடந்த நிகழ்ச்சியில், உங்கள் கபடி அணியில் இடம்பெறும் 7 இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் யார், என விராட் கோலியிடம் கேள்வி கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விராட், இந்திய அணியில் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ், ரிஷாப் பந், பும்ரா, கேஎல் ராகுல். இதுதான் என்னுடைய 7 பேர் கொண்ட கபடி அணி’’ என்றார். 

கபடி வீரர்கள் வலுவானவர்களாகவும், தடகள வீரர்களாகவும் இருப்பதால் நான் அதில் என்னைச் சேர்க்கப் போவதில்லை. கிரிக்கெட்டில் கோலி- டோனி ஜோடிக்கு இணையாக கபடியில் யாரை ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது, ராகுல் சவுத்ரி-அஜய் தாகூர் ஆகியோரை கூறினார். இவர்கள் இருவரும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கபடியில் தன்னை கவர்ந்த வீரர் ராகுல் சவுத்ரி என்றும் கூறினார்.


Advertisement