நட்சத்திர பந்து வீச்சாளரை கேலி செய்த விராட்கோஹ்லி! வைரலாகும் வீடியோ!

நட்சத்திர பந்து வீச்சாளரை கேலி செய்த விராட்கோஹ்லி! வைரலாகும் வீடியோ!


virat teasing pumrah bowling


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தநிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றனர். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.



 

இந்த நிலையில் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி, நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீசும் விதத்தை கேலி செய்யும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு ஏராளமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.