நடராஜன் இதை மட்டும் செய்தால் போதும் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பது உறுதி.! விராட் கோலி ஓப்பன் டாக்.!

நடராஜன் இதை மட்டும் செய்தால் போதும் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பது உறுதி.! விராட் கோலி ஓப்பன் டாக்.!


virat talk about nadarajan

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கி சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக விளையாடினார். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி t20 போட்டியில் நடராஜன் சிறப்பாக விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து  இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் நடராஜன் இடம் பெற்றுள்ளார். இந்தநிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, உலகக்கோப்பை டி20 தொடரில், நடராஜன்  இடம் பிடிப்பதற்கு என்ன நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

viratஇதுகுறித்து விராட் கோலி பேசுகையில், நடராஜன் தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்து விளையாடினால், அவர் உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதி. அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும், அவருக்கான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும். இனி வரும் போட்டிகள் அவருக்கு வைக்கப்படும் பலப்பரீட்சை என்று தெரிவித்துள்ளார்.