தோனி இருக்கும்போது என்ன செய்தேனோ அப்டி தான் இருப்பேன்.! எனக்கு நான் தான் தலைவன்.! விராட்கோலி ஓப்பன் டாக்.!

தோனி இருக்கும்போது என்ன செய்தேனோ அப்டி தான் இருப்பேன்.! எனக்கு நான் தான் தலைவன்.! விராட்கோலி ஓப்பன் டாக்.!



virat talk about captainship

கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட்கோலி அளித்த ஒரு பேட்டியில், அனைத்து விஷயங்களுக்கும் ஒரு காலம் உள்ளது. அப்படி தான் என் கேப்டன் பதவிக்கும். கேப்டனாக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியும். தற்போது வாழ்க்கையின் அடுத்த பக்கத்துக்கு செல்கிறேன்,

கேப்டன் பதவியில் இருந்து விலகி செல்வதும், அதற்கான முடிவை சரியான தருணத்தில் எடுப்பதும் தலைமை பண்பின் ஒரு அங்கமாகும். தலைவராக இருக்க நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அணியின் கேப்டனாக இல்லாத நேரத்திலும் தோனி அணியின் தேவைக்கு எல்லாவிதமான ஆலோசனையும் வழங்கினார். தோனி கேப்டனாக இருக்கும் போது அணியில் எப்படி இருந்தேனோ, அதே போல் தான் இப்போதும் இருப்பேன்.

நான் அணியின் ஒரு வீரராக இருந்தாலும் எப்போதும் கேப்டனை போல் தான் சிந்திக்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு நான் தான் தலைவன். எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செய்ல்படுவேன். ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார். அணியின் அடுத்த வளர்ச்சிக்கு புதிய நபர் தேவைப்பட்டார். இதனால் தான் நான் விலகினேன். எப்போதும் போல் இந்திய அணிக்காக விளையாடி ரன் குவிப்பேன், அது தான் என் பணி என தெரிவித்துள்ளார்.