ரோகித்துக்கு பதில் இஷான் கிஷானை சேர்க்கவேண்டுமா.? கொந்தளித்த விராட் கோலி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா..

ரோகித்துக்கு பதில் இஷான் கிஷானை சேர்க்கவேண்டுமா.? கொந்தளித்த விராட் கோலி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா..


virat press meet

துபாயில் நேற்று நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாகப் பாகிஸ்தான் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.

நேற்றைய போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ரோகித் ஷர்மாவை நீக்கிவிட்டு நல்ல பார்மில் உள்ள இஷான் கிஷானை அணியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதனை சற்றும் எதிர்பாராத விராட் கோலி, ரொம்ப துணிச்சலான கேள்வி. உலகிலேயே தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணியை வைத்து நாங்கள் விளையாடுகிறோம். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட முடியுமா. கடைசியாக நாங்கள் விளையாடிய ஆட்டத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்த கேள்வி நம்பமுடியாததாக இருக்கிறது என ஆவேசத்துடன் சிரித்தவாறே கூறினார். 

தொடர்ந்து பேசுகையில், நீங்கள் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டால் முன்கூட்டியே கூறிவிடுங்கள், அதற்கு ஏற்றார்போல் பதில் அளிப்பேன் என தெரிவித்தார். இந்திய அணி தற்போது பலமானதாக தான் உள்ளது. இது முதல் போட்டிதான். கடைசி போட்டி கிடையாது என தெரிவித்தார்.