நேற்றைய போட்டியில் கெத்து காட்டிய நடராஜன்.! நீ நம்பிக்கையான மனுசன்யா.! புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.!virat kohli appreciate natarajan

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய 329 ரன்கள் எடுத்தது. 

330 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை நடராஜன் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே ரன் அவுட் காரணமாக விக்கெட் விழுந்தது. அதன் பிறகு இரண்டாவது பந்தில் ஒரே ஒரு ரன்னும், மூன்றாவது நான்காவது பந்தில் ரன் ஏதும் இல்லாமலும் 5வது பந்தில் ஒரு பவுண்டரி மட்டுமே சாம் கர்ரனால் அடிக்க முடிந்தது.

natarajan
 
இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு விராட் கோலி பேசுகையில், இரு அணிகளுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. 49ஆவது ஓவரில் ஹார்திக், நடராஜன் இருவரும் அடுத்தடுத்து கேட்ச்களை தவறவிட்டனர். இதனால், நடராஜன் நெருக்கடியுடன் இருப்பார் என நினைத்தேன். ஆனால், அவர் இயல்பாகவே இருந்தார். கடைசி ஓவரை நடராஜன் சிறப்பாக வீசினார் எனத் தெரிவித்தார்.