
Virat kholi praises sreyas iyer
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. கோலி சதம் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தனர்.
35 ஓவர்களில் 255 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்ரேயஸ் 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசினார். கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவருமே கடந்த ஆட்டத்திலும் இதே போன்று சதம் மற்றும் அரைசதம் விளாசினர்.
ஆட்டத்தின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்ரேயஸ் ஐயரின் பேட்டிங்கை குறித்து புகழ்ந்து பேசினார். அப்போது பேசிய அவர், "ஸ்ரேயஸ் என்னுடைய சுமையில் பெரும் பகுதியை பகிர்ந்து கொண்டார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் தான் வெற்றிபெற முடிந்தது.
இதேபோன்று இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் ஆடும் வீரர்களை தான் நாங்கள் அணியில் வைத்திருக்க வேண்டும். மிகவும் நேர்த்தியாக பேட்டிங் செய்து எதிரணியின் பந்துவீச்சை நிலைகுலைய செய்தார். உண்மையில் அருமையாக ஆடினார்" என புகழாரம் சூட்டினார் கோலி.
Advertisement
Advertisement