ஒரே ஒரு ரன் அடிக்காம போயிட்டோமே..! கடும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்திய் ரிஷப் பாண்ட் மற்றும் ஹிட்மயர்.! தட்டிக் கொடுத்த விராட் கோலி.! வைரல் வீடியோ.!virat kholi Comforting to delhi team

14-வது ஐ.பி.எல் தொடரின் 22வது லீக் ஆட்டம் நேற்று குஜாராத் மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி இறுதியில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 1 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணியில் கடைசியாக இறங்கிய ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். 

டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பண்ட் பவுண்டரி மட்டுமே அடித்தார். இறுதியில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 1 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பாண்ட் மற்றும் ஹிட்மயர் இருவரும் சிறப்பாக ஆடியும், அவர்கள் கடைசி வரை களத்தில் நின்று ஒரே ஒரு ரன் எடுக்க முடியாமல் டெல்லி அணி தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு ரிஷப் பாண்ட் மற்றும் ஹிட்மயர் இருவரும் கடும் ஆக்ரோசத்தை தனக்குள்ளே வெளிப்படுத்த, அப்போது அங்கிருந்த விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் தட்டிக் கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.