விளையாட்டு

டி20 வரலாற்றில் கேப்டனாக புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்த விராட் கோலி!

Summary:

Virat kholi becomes most successful captain in bilateral t20 series

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்றுடன் முடவுற்ற டி20 தொடரில் 5-0 என நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரை கைப்பற்றியதுடன் விராட் கோலி கேப்டனாக ஒரு சாதனையை படைத்துள்ளார். இரு அணிகள் மற்றும் பங்குகொண்ட டி20 தொடர்களில் அதிக தொடர்களை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி. 

இந்தப் பட்டியலில் விராட் கோலி 10 தொடர்களை வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் டூப்ளஸிஸ் (9), மோர்கன்(7), சமி(6), தோனி(5) என முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்தப பட்டியல் குறைந்தபட்சம் 15 தொடர்களுக்கு கேப்டனாக இருந்தவர்களைக் கொண்டு கணக்கிடப்பட்டது. 


Advertisement