விளையாட்டு

9வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி.!! மளமளவென முன்னேறிவரும் லோகேஷ் ராகுல்.!

Summary:

9வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி.!! மளமளவென முன்னேறிவரும் லோகேஷ் ராகுல்.!

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மர்னஸ் லபுஷேன் 915 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 900 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே பட்டியலில் மளமளவென முன்னேறி 7 இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டு இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.


Advertisement