கோமதி மாரிமுத்துக்கு அள்ளிக் கொடுத்த மக்கள் செல்வன்; குவியும் வாழ்த்துகள்.!

கோமதி மாரிமுத்துக்கு அள்ளிக் கொடுத்த மக்கள் செல்வன்; குவியும் வாழ்த்துகள்.!


vijaysethupathi---gomathi-marimuththu---5lakhs-check

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலானா படங்கள் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெறுகிறது.  விஜய் சேதுபதி அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் வந்தது.

இந்நிலையில், 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடந்தது. இதில் கடைசி நாளன்று இந்தியாவின் சார்பாக பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டது.

vijaysethupathi

இதில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவ கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இப்படி ஒரு பெருமையை சேர்த்தார்.

இவரது இந்த திறமையை பெருமைப்படுத்தும் விதத்தில் நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சமும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கினா். அந்த வரிசையில் நடிகா் விஜய் சேதுபதி தற்போது ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கோமதியிடம் வழங்கியுள்ளாா்.

vijaysethupathi

தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூற முடியாத நிலையில் திருச்சியில் உள்ள தனது ரசிகர் மன்றத்தின் மூலம் இந்த காசோலையை வழங்கியுள்ளார். மேலும் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.