செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கைகொடுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் வீரர்.. சர்ச்சையானதால் பரபரப்பு விளக்கம்.!



Uzbekistan grandmaster Nodirbek Yakubboev refuses to shake hands with Vaishali explains 

 

மதரீதியிலான பழக்கத்தின் காரணமாக வைஷாலியுடன் கைகுலுக்க மறுபுத்ததாக உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

டாடா ஸ்டீல் செஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ், இந்திய செஸ் வீராங்கனை வைஷாலியுடன் எதிர்கொண்ட போட்டியில் கைகொடுக்க மறுத்து அமர்ந்தார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை சந்தித்தது.

இதையும் படிங்க: இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி; அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி.!

இந்த விசயத்திற்கு விளக்கம் அளித்துள்ள நோடிர்பெக் யாகுபோவ், தனது மத நம்பிக்கையின்படி தெரியாத பெண்களை தொட்டு பேச கூடாது. ஆதலால் அவருக்கு கைகொடுக்கவில்லை. வைஷாலியின் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. மேலும், எனது நடத்தை அவர்களை புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கோருகிறேன்" என தெரிவித்துள்ளார்.