இன்று நடக்கும் இரண்டு ஐ.பி.எல் போட்டிகள்.! முதல் போட்டியில் தான் சிக்ஸர் மழை, வாணவேடிக்கை.!

இன்று நடக்கும் இரண்டு ஐ.பி.எல் போட்டிகள்.! முதல் போட்டியில் தான் சிக்ஸர் மழை, வாணவேடிக்கை.!


Two IPL matches to be played today.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.  இன்றும் நேற்றுபோலவே இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே இன்றுமாலை 3:30 க்கு நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே இரவு 7:30 க்கு துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

sun raishars

 ஐ.பி.எல். தொடர் நடந்துவரும் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் சார்ஜா மைதானம் தான் சிறிய மைதானம். சார்ஜா மைதானத்தில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். எனவே இன்று நடக்கும் முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ்  - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் பல சிக்ஸர்களை ரசிகர்கள் ரசித்து மகிழலாம்.

2௦20 ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 17வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளிலும் ஹிட்டர்கள் அதிகமாக இருப்பதால் இன்று மைதானத்தில் வாணவேடிக்கையாக இருக்கும். எனவே இன்று நடக்கும் முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிய காத்துள்ளது.